Feb 22, 2011

எல்லைக் கோடுகள் மாறும் பாலஸ்தீனம் மலரும்

பாலஸ்தீனம்: இது யூதர்களுக்கு
புதைகுழி
முஸ்லிம்களுக்கு முகவரி.
பைத்துல் முகத்தஸ் அது
எங்கள் மூன்றாம் புனிதஸ்தலம்,
எதிர்கால பாலஸ்தீன நகரம்
ஒரு நாள்
எல்லைக் கோடுகள்
மாற்றியமைக்கப்படும்.
அகதிகளாய்
தேசத்தை தாண்டிய
நதிகளாய் வாழும்
பாலஸ்தீனர்களின்
கொடிகள் அங்கே பறக்கும்.
பெட்ரோல் சுகத்திலும்
டீசல் பெருமையிலும்
வாழ்நாளை கழிக்கும்
அரண்மனை கோழைகளுக்கு
மத்தியில்…
ஆயுதங்களோடு திரியும்
மானமிகு போராளிகளாய்
வாழ்கிறார்கள் பாலஸ்தீனர்கள்!
தாயின் கருவறை
வெப்பத்திலேயே இவர்கள் வீரம்
பெறுகிறார்கள்.
தாய்ப்பால் அருந்தும்போதே
போருக்கு தயாராகிறார்கள்!
காஸாவிலும், மேற்கு கரையிலும்
சிறுவர்கள் வீசும் கல்லெறி
தாக்குதல்களில்
அலறுகிறது
யூதர்களின் வட்டாரம்!
அதிர்கிறது
அமெரிக்காவின் கூடாரம்
இஸ்ரெலியர்களின் இதயங்களில்
இடியாய் இறங்கும்
“அல்லாஹ் அக்பர்” முழக்கங்களால்
நாளும் நகர்கிறது
போர் களம்!
தினத்தோறும் விழுகின்ற
ஒவ்வொரு ஜனாஸாக்களாலும்
மீண்டும், மீண்டும்
உயிர்த்தெழுகிறது
விடுதலை தாகம்!
புர்காவுடன் வீதிகளில் ஓடிவரும்
எம் சகோதரிகளை மறிக்க
டெல் அவிவின்
இயந்தர துப்பாக்கிகளுக்கு
இல்லை வலிமை!
இது வரலாறு கூறும் உண்மை!
இஸ்ரேலின் அழிவாயுதங்களால்
எமது லட்சியங்களை
தகர்க்க முடியாது
எங்கள் விழிகளை தோண்டினாலும்
கனவுகளை கலைக்க முடியாது.
யூதர்களின் தோட்டாக்கள்
இதயங்களை துளைக்கலாம்
எங்கள் ஈமானை
என்ன செய்யும்…-?
- எம். தமீமுன் அன்சாரி