Feb 22, 2011

இஸ்லாத்திற்கெதிரான யூத,கிருஸ்தவ சதிமுயற்சிகள்-பாகம்-1

ஆக்கம்:அல்ஹாபிழ் ஸைனீ (பிரச்சாரகர் தாருல் அதர் அத்தஅவிய்யா)
நவீன உலகை உருவாக்கிய இஸ்லாத்தை விமர்சிப்பதிலும்,அதனைக்கொண்டுவந்த தூதர்(ஸல்)அவர்களை கேலிச்சித்திரமாக வரைவதிலும் அற்ப சுகம் காணும் யூதர்களின் சதிவலைகள் நிரம்பிய ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் கேலிச்சித்திரங்களும் பலஸ்தீன் போன்ற நாடுகளில் அரங்கேறும் மிலேச்சத்தனமான கொலைகளும் இதற்குப் போதிய சான்றாகும். இவ்யூதர்களின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதித்திட்டங்களை படம்பிடித்துக்காட்டி முஸ்லிம்களை விழிப்பூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முஸ்லிம்களின் கொள்கையைத் தகர்க்க நினைத்த யூதர்கள் முதலில் அவர்களை ஆயுத ரீதியாக தகர்க்க நினைத்தார்கள்.அதில் தோல்வி கண்டார்கள். அப்பால் அறிவுரீதியாக முனைந்தார்கள். அதில் வெற்றி கண்டார்கள்.
அதன் முதற்கட்டமாக இஸ்லாமிய நாடுகளிலெல்லாம் தங்களது கல்விநிலையங்களை நிறுவினார்கள். உதாரணமாக: இஸ்லாமிய நூல்களை அதிகம் வெளியிடும் முஸ்லிம் நாடான லெபானிலுள்ள “பெய்ரூத்” எனும் ஊரில் அமெரிக்கப்பல்கலைக்கழ‌கமெனும் பெயரில் உருவாக்கியமை, அதே போன்று எகிப்தின் தலைநகர் “கெய்ரோவில்” அதிகமான அமெரிக்கப்பல்கலைக்கழ‌கங்களை உருவாக்கியமை, அதே போன்று கிருஸ்தவ மயமாக்கல் எனும் இலக்கில் “குல்லிய்யதுல் உர்தூன் அத்தத்காரி” எனும் பெயரில் ஒரு கலாபீடத்தை உருவாக்கியமை யூதர்களின் முதற்கட்டப்பணியாகும். தாங்கள் அமைத்த கல்விநிலையங்களுக்கு முஸ்லிம்கள் வரமாட்டார்கள் என்பதற்காக மதச்சார்பட்ட கல்வி நிலையங்கள் என்று வெளியில் கூறிக்கொண்டார்கள். இதனால் ஏமாற்றம் கொண்ட முஸ்லிம்கள் அக்கலாபீடங்களுக்குச் சென்று கல்விகற்க ஆரம்பித்தார்கள்.
யூதர்கள் முஸ்லிம்களை குர்ஆனிய சிந்தனைகளை விட்டும் திசை திருப்புவதற்காக ஆங்கில மொழியிலேயே தங்களது கல்வியை ஆரம்பித்தார்கள்.  இதைப் பற்றிக் குறிப்பிடும் “திக்லி” என்ற ஒரு கிருஸ்தவர்
يجب أن نشجع إنشاء المدارس وعلى الأخص مدارس التعليم الأوروبي الغربي لأن كثير من المسلمين قد تزعزع إيمانهم عندما تعلموا اللغة الإنجليزية
(islam And missions)
கல்விநிலையங்களை குறிப்பாக ஐரோப்பிய மேற்கத்தய சிந்தனைகளைத் தழுவிய கல்விநிலையங்களின் உருவாக்கங்களை ஊக்குவிப்பது கடமையாகும்.ஏனெனில் அதிகமான முஸ்லிம்கள் ஆங்கில மொழியைப் படித்த போது அவர்களது ஈமான் நிலைதடுமாறிவிட்டது என்று கூறுகின்றார்.
கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஓரங்கட்ட முற்பட்ட இவ்யூதர்கள் அக்கல்வி நிலையங்களில் “அல்பர்” என்ற கீழத்தயவாதி ஒருவரினால் எழுதப்பட்ட (ஈஸாக்) எனும் நூலினை அங்கு படிக்கும் 5ம்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் புகுத்தினார்கள். இந்த நூலை எழுதியவன் இஸ்லாத்தின் மீது அதிக குற்றச்சாட்டுகளை சுமத்தியவன் ஆவான்.
உதாரணமாக தனது நூலான تاريخ إيزاك எனும் நூலில் குறிப்பிடும் போது
واتفق لمحمد أن يعرف أثناء رحلاته شيأ قليلا من عقائد اليهود والنصارى (تاريخ إيزاك ص:31)
முஹம்மத் தான் மேற்கொண்ட பிரயாணங்களினூடாக யஹூதி,நஸாராக்களின் கொள்கையிலிருந்து சிலதை அறிந்து கொண்டார் என்பது ஏகோபித்த முடிவாகும்” எனக்கூறுகின்றான்.
எனவே இவ்வாரான இஸ்லாமிய விழுமியங்களையும் அதன் பாராம்பரியங்களையும் குழிதோண்டிப்புதைக்கின்ற நூற்களையே இந்த மேற்குலகம் முஸ்லிம்களுக்குரிய பாடத்திட்டங்களாக அமைத்துள்ளன.
முஸ்லிம்கள் அவசியம் இதில் விழிப்பாக இருத்தல் வேண்டும். மேலும் ஆண் பெண் கலப்புப் பாடசாலைகளைக்கொண்டு வந்தவர்களும் இந்த மேற்கத்தயவர்களே!இதனால் சமூகத்தில் கேடுகளும், இழிவுகளுமே ஏற்பட்டது என்பதில் சந்தேகம் கிடையாது. இதற்குச் சான்றாக: இந்தியாவில் 10 வயதுச்சிறுவன் தனது ஆசிரியையை விபச்சாரத்திற்கு அழைத்த நிகழ்வும், பிரிட்டனில் “மாயிக்” என்ற 14 வயதுச்சிறுவன் தனது ஆசிரியையிடம் தவறாக நடக்க முற்பட்ட நிகழ்வையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்.இது லண்டனில் வெளியாகும் صحيفة الشرق الأوسط எனும் பத்திரிகையில் வெளிவந்த செய்தியாகும்.
இந்த ஆண் பெண் கலப்புப் பாடசாலையினால் சென்ற ஆண்டு மாத்திரம் 120 ஆயிரம் யுவதிகள் கர்ப்பமுற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 20 வயதுக்குற்பட்டவர்கள் என ஒரு ஆய்வு கூறுகின்றது. இவ்வாறு ஒழுக்கச் சீர்கேட்டை உலகுக்கு இறக்குமதி செய்யும் மேற்கத்தய வலையில் சிக்காமல் தன்னைக்காத்துக்கொள்வது ஒவ்வெரு முஸ்லிமின் மீதும் கட்டாயக்கடமையாகும்.
“நலன்புரி அமைப்புக்கள்” (N.G.O) எனும் பெயரிலும் முஸ்லிம்களுக்கிடையில் புகுந்து தனது கைவரிசையை கட்டவிழ்த்துவிடுகின்றனர். அண்மையில் வெளியான “புர்கான்” எனும் அரபு சஞ்சிகையில் வெளியான தகவலின் படி இந்த கிருஸ்தவர்கள் முஸ்லிம் நாடான “செனுகள்” நாட்டிற்குச்சென்று தங்களது கிருஸ்தவப்பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்ற படியாலும், அங்கு வாழும் ஏழைகளுக்கு உதவிகளை அளித்துவருகின்ற படியாலும் வருடாந்தம் 20 ஆயிரம் முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை விட்டு அன்னிய மதத்திற்கு மாறிவருகின்றனர் என அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே முஸ்லிம்சமூகம் இதில் விழிப்பாக இருத்தல் வேண்டும் என்றால் வெறுமனே வாயளவில் “மேற்கத்தய சிந்தனைகளைத் தகர்க்க வேண்டும்” என்று வாய்கிழியப் பேசிவிட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களது சுன்னாவான தாடியை சிரைத்து மேற்கத்தயவாதிகளுக்கு ஒப்பாகாமலும், சில தப்லீக் இயக்கவாதிகள் கூறுவது போல் “முதலில் முஸ்லிம்களுக்குள்ளேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்ற குறுகிய நோக்கைக் கையாளாமலும், தாருல் அர்க்கம், ஜமாஅதே இஸ்லாமி போன்ற சில அமைப்புக்கள் கூறுவதைப் போல் சில மார்க்க விவகாரங்களை “சில்லரைப்பிரச்சனைகள்” என ஓரங்கட்டாமலும், தூரநோக்குடன் செயற்பட்டு இந்த மேற்கத்தயத்தின் சவால்களை முறியடிப்பதற்கு அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழியில் ஒன்று சேர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!